
வலிகளின் காதலி...
- Izzath Isharah

- Dec 22, 2020
- 1 min read

காதலிக்க கற்றுக்கொண்டேன்
வலிகளை மட்டும்
முதலும் கடைசியுமாய்
சில நேர புன்னகைகளுக்காய் தவிப்பதை தவிர்த்துக்கொண்டேன்
காலமெல்லாம் கண்ணீருடன் வாழ பழகிக்கொண்டேன்
பல கனவுகளை கனவிலே மாய்த்துக்கொண்டேன் கல்லறைகளாய் நிறைத்துக்கொண்டேன்
இன்னும்
உயிர்வாழ பழகிக்கொண்டேன்
சில வேஷ திரைகளை என் முகத்திலே பதித்துக்கொண்டு
வாழ வேண்டி இருக்கும் நாட்களுக்காய்...
:இஸ்ஸத் இஷாரா:



Comments