ஓர் முறையாவது...
- Izzath Isharah

- Dec 6, 2022
- 1 min read

உணர்விழந்து போகிறதுஎன் நினைவுகள்இராத்தூக்கம் மறந்து போகிறதுஎன் விழிகள்உண்மை என தெரிந்ததும் ஏற்றிட மறுக்கிறது மனம் எல்லாம் அறிந்தும் அதைஉணர்ந்திட தவிர்த்து விடுகிறேன்நெஞ்சுக்குழியின் ஏதோ ஓர் சிறு மூலையொன்றில் உனக்கானஎன் எக்கம், தவிப்பு எல்லாம்இன்னும் கொஞ்சம் மிச்சமாய் இருக்கத்தான் செய்கிறது
மீண்டும் மீண்டும் உன் அழைப்புக்காய்மட்டும் என் தொலைபேசி அலறிவிடாதாஎன்று நிதமும் அதோடு சண்டை போட்டு இறுதியில் அதிலும் தொற்றேபோய் விடுகிறேன் இருந்தும்மீண்டும் மீண்டும் உன் விம்பங்களைமட்டும் தேடித்தேடி என் கண்களில்நிரப்பிக்கொள்கிறேன் ஓர் முறையாவதுஉன்னுள் அஸ்தமித்து விடஎனக்கோர் இறுதி வாய்ப்பு கிடைத்தது விடாதா..?காத்திருக்கிறேன் இன்றும் என்றும்...
இஸ்ஸத் இஷாரா




Comments