தவறான(அ)வள்...
- Izzath Isharah

- Dec 4, 2022
- 1 min read
சிறு புன்னகையில்
வலிக்கதது போல நடிப்பதும்
இருளிலே கண்ணீர் வடிப்பதும்
வாடிக்கையாகிவிட்டது எனக்கு
ஏனென்றால் இருளில் வடிக்கும்
கணீருக்கு சாட்சி இருப்பதில்லை
நீ தந்து விட்ட ஆழ்ந்த காதலின் சுகமும்
அதை மறந்து போன உன் பார்வையும்
உனக்கே பிடிக்காது போன நானுமாய்
இன்று தனிமையும்
என் கணீரும் உன் நினைவில்
நீண்டுகொண்டே இருக்கிறது
வலிக்கும் பொழுதெல்லாம்
என்மீது மட்டும் தவறுகளை
தாராளமாய் ஏற்க துணிந்து விடுகிறேன்
அதிலென்ன சந்தேகம் - இங்கு
நான் மட்டுமே தவறானவள் -நீ
அறிந்தவை எல்லாம் என் தவறுகளே
தவிர எதுவுமமில்லை
தவறிழைப்பவள் தவறன்றி
வேறு எதை செய்வாள்...
: இஸ்ஸத் இஷாரா





Comments