top of page
Search

நெருக்கம்...

  • Writer: Izzath Isharah
    Izzath Isharah
  • Jan 24, 2023
  • 1 min read

நாம் என்ற நிலையில்

இருந்து நான் யாரோ

நீ யாரோ என்ற நிலைக்கு

நகரும்


மெல்ல மெல்ல

முக்கியத்துவம் குறையும்

பிரமிப்பு அகலும்;

சுயங்கள் அழியும்;

மனங்கள் உடையும்


அத்தனையும் மீறி

நினைவுகள் மட்டும்

நிலையாய் நின்று

வாழும் போதே கொல்லும்


தனிமையின்

புலம்பல்கள் கூட சில நேரம்

தெகிட்டி போய்விடும்


வெறுமையின் இடைவெளிகள்

எனோ தவிப்புக்களால் நிறையும்


நேசங்கள் தள்ளிப்போனால்

நகர்ந்திடும் நிமிடங்களும்

கொல்லாமல் கொல்லும்

இதயத்தை...


: இஸ்ஸத் இஷாரா

 
 
 

Comments


Post: Blog2 Post

©2020 by Zaara: Izzath Isharah All Rights Reserved.

bottom of page