யாவும் கற்பனையே..!
- Izzath Isharah

- Dec 8, 2022
- 1 min read
நினைத்தேன்
நீயும் எனக்காய் ஒரு நொடி
சிந்திப்பாய் என்று
நினைத்தேன்
உன் நினைவில் ஒரு முறையாவது
என்னை தேடிக்கொள்வாய் என்று
நினைத்தேன்
உன் ஒரு துளி கண்ணீரில் என்
காதல் உணர்வாய் என்று
நினைத்தேன்
உன் கனவில் என் விம்பம்
காண்பாய் என்று
நினைத்தேன்
உன் பயணங்களில் என்
வாசம் உணர்வாய் என்று
நினைத்தேன்
உன் ஆடைகளில் என்
அணைப்பை அறிவாய் என்று
நினைத்தேன்
நீயும் என்போல் இந்த பிரிவில்
ஒரு கணமேனும் சிறு வலி
உணர்வாய் என்று
இன்று நான் உணர்ந்தேன்
உன் நினைவிலும் நிஜத்திலும்
எனக்கான கணங்கள் யாவும்
என் கற்பனை மட்டும் தான் ;
என்றும் நான் உண்ணவள் இல்லை
என்று...
இஸ்ஸத் இஷாரா






Comments