வலிக்கிறது...
- Izzath Isharah

- Jun 23, 2022
- 1 min read
வார்த்தைகள் வலுவிழந்து
என் கண்ணீரும் கரைதொட்டு
கனமாகிப்போன என் சிறு இதயம்
இன்னும் உனக்காய் துடித்து கொண்டு தான் இருக்கிறது...
ஏற்கவும் முடியவில்லை
விட்டு விடவும் மனமில்லை
மறுத்து விட ஆயிரம் காரணம் இருந்தும்
அணைத்துக்கொள்ள மறுபடியும் துடிக்கிறது மனது...
ஆயிரம் முறை ஆறுதல் சொல்லியும்
சில நேரங்களில்
உடைந்து தான் போகிறது இந்த
இதயம் மீண்டும் மீண்டும்...
இழப்பவை ஏதுவாக இருப்பினும்
மனதை இழந்து விடுவது
எதிலும் கொடியது - உனக்காய்
எழுதப்படாத ஒன்றிடம்....
: இஸ்ஸத் இஷாரா






Comments