வெற்றிலை பெட்டியும் அவளும்..
- Izzath Isharah

- Jan 12, 2022
- 1 min read
மூன்று வேளை சோறு இல்லாமல்
இருப்பினும் அவள் பெட்டியில்
வெற்றிலைக்கு பஞ்சம்
இருந்ததில்லை
என் ரகசிய வங்கி அவள்
கள்ளத்தனமாக காசு தருவதில்
கலை பயின்றவள் சில
பொழுதுகளில்
யாரும் என்னை உரத்து பேசிட
விட்டதில்லை அவள்
ஆனாலும் என்னை நேரம் தவறாமல்
வம்புக்கு இழுப்பாள்
சின்ன சின்ன பழைய சுவாரசிய கதைகள் பேசி கொண்டே
பல அறிவுரைகளை நுணுக்கமாய்
மூளைக்கு ஏற்றி விடுவதில்
கெட்டிக்காரி
எனக்கென்ன பிடிக்கும் என்று
தேடித்தேடி சமைத்து தருவதில்
என்னதான் ஆனதாமோ
என் அழகு கிழவிக்கு
பொரியல் என் இன்றி
என் தொண்டையில் இறங்கிவிடாத மதிய சாப்பாட்டுக்கு பகரமாய்
கோழி முட்டை பொரித்து
வைப்பாள் பக்குவமாய்
பின்னேரம் தேநீருடன் சில துண்டு பனிசும் தருவாள் என் அழகி
இரவுகள் நீளும் எங்கள் கதைகள்
ஓய்ந்த பாடில்லை தினமும்...
அவள் என் அழகு அம்மம்மா❤️
:இஸ்ஸத் இஷாரா:





Comments