யாரோ அவன்...❤️
- Izzath Isharah

- Apr 12, 2022
- 1 min read
Updated: Jul 13, 2022
ஒரு முறையும் பல முறையும் தீண்ட தோன்றியதோ உன்னையே தீண்டத்தகாத உறவும் நீயோ...
ஸ்பரிசங்களின் ஆயுள் சில வினாடிகள் ஆயினும் ஆயிரம் நொடிகளில் உன்னவள் ஆனதும் வியப்பே...
இமைவழி முத்தமும் இதழோர முத்தமும் இயன்ற வரை ஈர்க்கும் உன் முன் நெற்றி முத்தமும் ஆயுள் முடிவு வரை ஆறுதல் தருமோ என்னுள்....
இதயமும் இயன்றவரை இயலாது போகும் உன்னில் என்னை தொலைத்து விட்டதில் இருந்து இறப்பும் ஒரு காரணம் ஆகும்
உன்னில் இருந்து என்னை மீட்டு கொள்ள....
அரவணைப்பில் தோன்றும் ஆறுதல் உன் பார்வை ஒன்றிலும் என்னை ஆரத்தழுவி கொள்ளும் சில கணங்களில்....
காரணம் இன்றி ஒரு காதல்
காயங்கள் பல தந்தாலும் காலம்
நீளும் வரையும் கனவோடு தொடரும்
சில நியாபாக கணங்களில்...
நீ என்னவன் இல்லயாயிலும்
நான் என்றும் உன்னவள் தானடா
என் கற்பனைக் காதலா....
-இஷாரா






Comments