மறுபடியும் ஒரு...
- Izzath Isharah

- Jun 1, 2022
- 1 min read

மறு முறை பேச மௌனம் ஒன்று காரணமாய் போய் விடுமோ என்ற பயத்தில் மீண்டும் மீண்டும்
புன்னகை ஒன்றுடன் முடித்து கொள்கிறேன் என் வார்த்தைகளை
மௌனத்தில் மரணித்து போகின்ற என்
ஆயிரம் வினாக்களும் விடயறியா புதிராகியே போய் விடுகின்றது நினப்பதும், மறப்பதும், மன்னிப்பதும் பழகியே போகிறது சில காலமாய்
அருகிலிருந்தும் தூரமாய் சில உறவுகள் உருமாறிப்போவதும்
உணர்வுகள் உருவிழந்து உவமையாகி போவதும் சில நேரங்களில் காலத்தின் பிடியில் கரைந்தே போய்விடுகிறது
பிடித்தவை கிடைக்காமல் போவதும்
கிடைத்ததை பிடித்துப்போக செய்வதும்
ஒரு சில நேரங்களில் தனிமையை காதலிக்கதத்துவங்குவதும் ஒரு வகை கலைதான் இந்த மானுட ஜென்மங்களாய்ப்போன நம் வாழ்விலே....
-இஸ்ஸத் இஷாரா




Comments