
மாற்றம்....?
- Izzath Isharah

- Nov 17, 2022
- 1 min read
உன் கோபம்
உன் ஊடல்
நீ போடும் சண்டைகள்
நீ எனக்காய் செய்யும்
சிறிய விஷயங்களும்
உன் காதலும்
உன்னிடம் எனக்கு பிடிக்கும்
என்று முதலில் அடிக்கடி சொல்வாய்
என் சிறு கோபத்தை கூட
அணு அணுவாய் ரசிப்பாய்
நான் சண்டயிட்டால்
என்னை சமாதானம் செய்வதில்
முதலில் நிற்பாய்
எனக்காக ஒவ்வொன்றும்
ரசித்து செய்வாய்
என்னை அதிகம் நினைத்து கொள்வாய்
எனக்காய் எதுவும் செய்வாய்
நான் சொல்லும் சிறு விசயங்கள் கூட
உன் எண்ணம் முழுதும் நிலைத்திருக்கும்
என் பார்வை கண்டு என் மனதை அறிந்து நடப்பாய்
உன் கனவுகளாய் தினமும் நான் இருந்தேன்
உன் தேடலில் முதலாய் நானே இருந்தேன்
எனக்கென உன் எல்லா நேரமும் நீயே தந்தாய்
எனக்கு யாரும் இல்லா நேரம்
எனக்கென எல்லாமாக நீயே இருந்தாய்
அன்று நீ தொலைவில் இருந்தும்
என்னுள்ளே இருந்தாய்
ஆனால்;
இன்று நீ என் அருகே இருக்கிறாய்
ஆனால் யாரோ போல
நடந்து கொள்கிறாய்
அன்று என்னிடம் பிடித்துப்போனது எல்லாம்
இன்று துளியும் பிடிக்காமல் போனது உனக்கு
உன் தேடலில் இன்று நான் இல்லை
ஆயிரம் உறவுகள் இருந்தும் அதில் நீ மட்டும் இல்லை இன்று
ஏன் இந்த மாற்றம் ?
என் வலி அறிந்தும்
என்னை வதைக்கிறாய்
வதைப்பது நீயாய் இருப்பதால் மட்டும்
என் வலிகளின் துளிகளை என் தலயனைக்குள்
தகனம் செய்து விடுகிறேன்
அருகில் இருப்பதில் அருமை இல்லை
தொலைந்து போயின்
என்னை சில நொடிகள் நினைவில் கொள்வாயோ?
: இஸ்ஸத் இஷாரா




Comments