
பக்குவம்...???
- Izzath Isharah

- Jun 13, 2021
- 1 min read
Updated: Apr 12, 2022
உணரத்தான் முடிவதில்லை
சில உறவுகள் முகமூடியுடன் இன்னும் நம்முள் நிலைத்திருப்பதான்
காரணத்தை
ஏளனப்பார்வைகள் மாத்திரம் குறைந்துதான் போய்விடுமா
இந்த வஞ்ச உலக மனிதர்கள் மத்தியில்
நியாயங்கள் நிலை குலைவதும்
விட்டுக்கொடுப்புக்கள் விடுகதயாகி போவதும்
உதவிகள் உதாசீனப்படுத்தப்படுவதும்; இன்னும் ஏராளம்
துணையாக நிற்க வேண்டிய
பொழுதில் நம்மை உதறித்தள்ளி விட்டு போகும் உறவுகளின் சுயரூபங்கள் அவிழ்த்து விடப்படுகின்றன
பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவதன் அர்த்தத்தை
மெல்ல மெல்ல என் மூளை புரிய தொடங்குகிறது
முகமூடிகள் கழன்று வீழ்ந்து போவது புரியாமல் இன்னும் சிலர் தம் வாய்ச்சொல் வீரத்தில் விளையாடிச்சிரிக்கிறார்கள்
மெல்ல மெல்ல என் மூளை என்ன சுற்றி நடப்பவற்றை அசை போட இவை எல்லாம் புரியும் அளவுக்கு நான் பக்குவம் அடைந்து விட்டேனா....???
:::இஸ்ஸத் இஷாரா:::






Comments