
புரிந்து கொள்வாயோ ?
- Izzath Isharah

- Oct 10, 2020
- 1 min read

என் மௌனம் கலைக்கும்
உன் சில பார்வைகள்
காரணம் அறியேனடா
நீ தாண்டிப்போகின்ற தருணங்களில் எனோ
என்னை நான் மறந்து
போகிறேன்
காரணம் இன்றியே நானும்
என் தனிமையை உணர மறுக்கிறேன் உன்
நினைவுகளில் தத்தளிக்கும் பொழுதுகளில்
சொல்லாமலே தவித்திடும்
என் காதலை உணர்வதில்லை போலும் நீ இருந்தும்
சில நொடி என்ன ஏனடா பார்வையால் மட்டும்
கொல்கிறாய்
முட்டி மோதி ஒருநாளிலே
என் காதலை உன்னிடம் சொல்லிட்டேனோ ?
இல்லை என வரிகளில்
புரிந்து கொள்வாயோ ?
என்னவன் நீ என...
-இஸ்ஸத் இஷாரா-




Comments