புரிதல்கள்...!!!
- Izzath Isharah

- Aug 13, 2020
- 1 min read

சில நேரங்களில்
வார்த்தைகளை விட மௌனமே சிறந்ததாய் தோன்றி விடுகின்றது
தேவயில்லா வாதங்களை விட
புரியாதவர்களை விட புரிந்து கொள்ள தெரியாதவர்களிடம்
பேசி பலன் என்ன என - சிறு புன்னகையுடன் விலகி விட தோன்றுகிறது
உணர்ந்து கொள்ள ஆயிரம் காரணங்கள் இருப்பினும் சில மறுப்புகளுக்கும் எதிர்ப்புகளுக்கு நடுவே விவாதங்களுக்கு இடமில்லை
உண்மைகள் சொல்லப்படாமலும்
சில உறவுகள் உணரப்படாமலும் போகின்ற தருணங்கள்
சிறு புன்னகையும் சில துளி கண்ணீரும் தீர்த்து விடுகின்றது
காலப்போக்கில் இந்த வலிகளும் வலிக்கான காரணங்களும் நினைவுகளில் நச்சரிக்கும் பொழுதுகள் கண்ணீரை விட சில ஏளன சிரிப்புகளை நம் உதடுகள் உதறி விடுகின்றது
எனோ இன்னும் புரியப்படாத சில காதல் கதைகளும் கண்ணீரை விட புன்னகையை மட்டும் வெளிப்படையாக வீசி விடுகின்றது சாலை ஓரங்களில் சில கன்னிக்காதல் சிட்டுகளை காண்கின்ற வேளைகளில்....
:இஸ்ஸத் இஷாரா:




Comments