நீயும் நானும்...!!!
- Izzath Isharah

- Aug 9, 2020
- 1 min read

இதல்லவோ நிஜம்
என் மூச்சிழக்கும் காலம் வரை
உன் அருகே
கதியாகிப்போக
நீ என்ற ஒன்று நான் மட்டுமே அல்லவா
காலம் உள்ள வரை
என் காதல் உனக்கு மட்டுமல்லவா..?
நரை கொள்ளும் போதிலும்
நகை கொண்ட உன்
வதனில் உறைந்தே
போவேனடா
நம் காதல் செய்யும்
காலம் எல்லாம்
கனவுகள் கூட நிஜம் தானடா உன்னருக்கே
சின்ன ஊடல் கூட
சில நொடி மட்டும் ஜனனம் கொண்டு மரணித்து போகுமடா உன்னிடமே
மரணம் ஒன்று காணும்
வரை மாறாத காதல் -
நானும் நீயும் என்ற
நிஜம் மட்டும் தானடா...
:இஸ்ஸத் இஷாரா:




💝