
தொலைத்து விட்டேன் உன்னை....!!!
- Izzath Isharah

- Oct 21, 2020
- 1 min read
உன்னுள்ளும் நான்
இருப்பதை
அறிந்தும் எனோ உன்னை
இழந்து போகிறேன்
கனமற்ற என்
காரணங்களுக்காய்
என் ஒருதலலைக்காதல்
இன்று உயிரிழந்து கிடக்கிறது
என் கண் முன்னே
வாய்விட்டு அழுதுவிட
முடியாமலே தவிக்கிறேன்
உன்னை சேர்ந்துவிட ஆயிரம் காரணம் இருந்தும் உன்னை தொலைத்து விட்டேன் இன்று தெரிந்து கொண்டே
சில நேரங்களில்
நாம் விரும்புவதை தூர நின்று ரசித்து செல்வதே
நியாயமாய் தோன்றுகிறது
இந்த நியாயமற்ற உலகில்
வலிகள் இருந்தாலும்
வாழ்ந்து தான் ஆக வேண்டும்
நம் எதிர்பார்ப்புக்கள் கனவாகிப்போகும் வேளைகளில்...
-இஸ்ஸத் இஷாரா-






Comments