தாயுமானவள்....
- Izzath Isharah

- Jul 9, 2020
- 1 min read
Updated: May 8, 2022
என் கன்னக்குழியை முத்தத்தால் மணக்க செய்தவள் என் நாடி நாளம் முழுவதும் குருதியால் நிறைத்தவள் என் சுவாசம் முழுவதும் காற்றாய் கரைந்தவள் என் நினைவுகளுக்கு நிஜம் சேர்த்தவள் என் கனவுகளில் கை கோர்த்து வருபவள்
என் கவலைகளில் கண்ணீரானவள்
என் வார்த்தைகளில் வரிகளானவள்
என் பார்வையின் விம்பமானவள்
என் இறுதி மூச்சு வரை எனக்கேயானவள் அவள்-என் தாயுமானவள்.... -இஸ்ஸத் இஷாரா-




Comments