
சில நிமிடங்களில்..!!!
- Izzath Isharah

- Oct 13, 2020
- 1 min read
யார் நினைத்தது இந்த
பாழடைந்த என் எண்ணத்து கோட்டைகளில் சில
நிறைவேறாத ஆசைகள்
மூடிக்கொண்ட என்
விழிகளுக்குள் சில
கனவுகளின் ஏக்கங்கள்
ஆயிரம் ஆசையாய் வாழ்ந்திட எண்ணிய சில நொடிகளில் சருகாய்ப்போன சில கண்ணீர் துளிகள் என்றும்
என்னோடு வாழ்ந்திடும் இருளாகிப்போன என் பகல் பொழுதுகள்
மலராய் போக வேண்டிய
என் ஆசைகள் இன்று என் மன்னறையின் மீது சில இதழ்களாகி கிடக்கின்றன
கருகிப்போன என் வானம் கதறித்தான் அழுகிறது
எனோ இனிமேலும்
நான் இல்லை என
அறிந்த பின்னரும்....
-இஸ்ஸத் இஷாரா-






Comments