காத்திருக்கிறேன்..!!
- Izzath Isharah

- Aug 8, 2020
- 1 min read
எதிர்பார்க்கிறேன்
என்னவனை
எனக்கானவனை
காலமெல்லாம் என்
கை கோர்த்து என்னோடு கனவிலும் நிழலாய்
இருப்பவனை
என்றும் ஓயாத காதலாய் கணப்பொழுதும் என்னை பிரிந்திடாமல் ஒவ்வொரு பொழுதும் எனக்காக காத்திருப்பவனை கண்ணெதிரே கண்டிட துடிக்கிறேன்
சிறு சிறு சண்டைகளிலும்
என்னை தோற்கடிக்காத எப்போதும் எனக்காக மட்டுமே தோற்று போகின்ற என்னவனை என்றும் எதிர்பார்க்கிறேன்
யாரிடமும் என்னை விட்டுக்கொடுக்காமல் என்னிடம் மட்டும் என்னை குறை கூறும் அவனை சற்றேனும் கண்டிட காத்திருக்கிறேன்
என் கோபங்களையும்,
என் சண்டைகளையும்,
என் சந்தோஷங்களையும்,
என் புன்னகையையும்
ரசிக்க மட்டும் தெரிந்தவனை கண்டிட தவிக்கிறேன்
கடிகாரம் சுற்றும் கணங்களிலும் கூட கண்ணிமைக்காது என்னை ரசித்திடும் கள்வனின் கண்ணிரண்டை கண்டிட இன்னும் காத்திருக்கிறேன்
உலகழியும் கணம் தனிலும்
இமை மூடும் நொடி தனிலும்
என் நினைவு தன்னை இழக்காமல் இருக்கின்றவனுக்காய்
மட்டும் காத்திருக்கிறேன்...!!!
:இஸ்ஸத் இஷாரா:






♥️♥️♥️