ஒருதலைக்காதல்....
- Izzath Isharah

- Sep 11, 2020
- 1 min read

முழுவதும் உன்னுள்
தொலைந்து விட்டேன்
காரணம் அறிய மாட்டேனா
என்றும்
காவியக்காதல் கண்டது
எல்லாம் அற்பமாய்
தோன்றுதே நொடியும்
உன் அருகே
சில்லென்ற சிறு கீற்றாய் நீ என்னை பார்க்கிற நொடிகளில் தொலைந்துதான் போகிறேன் காரணம் இன்றியே
சொற்பமாய் சிரிக்கிற
போதிலும் அதை எண்ணி என் இரவுகளை தொலைத்துதான் போகின்றேன் சில வேளை
எனக்கான தேடலாய் நீ
இருப்பதை சொல்லியே
தீர்த்திட ஒரு நொடி போதும் இருந்தும்
சொல்லிடா தவிப்புகள்
நேர்கின்ற நொடிகளில்
ஒரு கணம் மறக்கிறேன் என்னையே நானும்....
:இஸ்ஸத் இஷாரா:




Comments