
என்னவள்....!!!
- Izzath Isharah

- Oct 15, 2020
- 1 min read
தீயது எனக்கண்டும் என்ன கருவோடு சுமந்தவள்
தன் வாழ்வை இழந்து
என்னை வாழ வைப்பவள்
என் புன்னகைக்காக அவள்
கண்ணீரை விலையாய் கொடுத்தவள்
என்னை பெருமை பிறர் பாட
பலர் பேச்சுக்களில்
பேராய்ப்போனவள்
தன் துணையிழந்து என்னை
தூண் போல காத்தவள்
என் பிடிவாதத்தை பரிகாசம் செய்யாதவள் என் கண்ணீரை கையிலேந்துபவள்
என் கஷ்டங்களில் கண்ணானவள்
என் சோகங்களை செவிசாய்ப்பவள்
என் பேச்சின் மொழியறிபவள்
என் வாழ்க்கையின் அர்த்தமானவள்
என் வாழ்வானவள்
என் உயிரானவள்
என்னவள்
என் தாய் ....
-இஸ்ஸத் இஷாரா-






Comments