என் தனிமையே...!!!
- Izzath Isharah

- Aug 13, 2020
- 1 min read
அது ஒன்றுதான் என்
தாயினும் பாசமாய் என்னோடு உறவாடுகின்றதோ
என்னருகே என்றும்
ஆழ்ந்த உறக்கத்திலும்
சில நொடி திடுக்கங்கள்
எனோ என்னிலும்
என் கனவிலும் என்னை
ஆட்சி செய்கிண்றதோ
சில நேரம் மௌனித்து போய்விடவும் வார்த்தைகளை ஈவிரக்கமின்றி
கொன்றுவிடவும்
செய்கின்றதோ
சில தலையணை கீறல்களாய் கண்ணீரை கொட்டிவிடவும் என்னை ஆயத்தம் செய்து விடுகின்றதோ
என் இரவுத்தூக்கங்களை இரக்கமின்றி கொலை
செய்துவிட தினமும்
ஆயுதமேந்தி
காத்திருக்கிறதோ
காலப்போக்கில் என்னை
உயிரற்ற ஜடமாய் நடமாடவும் செய்து விட போகின்றதோ
இந்த உலகிலேயே...
:இஸ்ஸத் இஷாரா:






Comments