என் கண்ணீர்...!!!
- Izzath Isharah

- Sep 1, 2020
- 1 min read
மதிப்பு இல்லாதது தான்
ஆனாலும் என்னோடு எப்போதும் துணை வரும் உயிரற்ற ஜடம்
இது ஒன்றுதான்
இராப்பொழுதுகளில் என் தலையணை விழுங்கிடும் மதுவாய் இருக்கிறது
ஒவ்வொரு நாளும்
சில சப்தமில்லா கதறல்களின் பிராசவமாய் என்
விழியோரத்து வாசல்களில்
எட்டி பார்க்கிறது
நான் என்ன மெல்ல மெல்ல இழக்கும் தருணங்களை என்னோடு சேர்ந்து
ஊமையாய் ரசிக்கிறது
சொல்லப்போனால் என் வெறுமைகளின் வெளிப்பாடாக இது ஒன்றுதான் இருக்கிறது என்றும் என்னோடு
என் கண்ணீராய்....!!!
:இஸ்ஸத் இஷாரா:






Comments