உன்னை கடந்து போக...
- Izzath Isharah

- Sep 4, 2022
- 1 min read
உன்னில் இருந்து
என்னை மீட்டுக்கொண்டு
என்னுள் என்னை மாற்றி விட்டு
உன்னை தூர விலக்கியே போக
தவிக்கிறேன்
இரு மனம் கொண்டு என் நாட்களின்
முடிவில் கண்ணீர் ஒன்றே
தருகிற வலியினில்;
என் ஆசைகளை
என் எதிர்பார்ப்புக்களை
என் எக்கங்களை
உன் மீது இருக்கும்
என் எண்ணங்களை
சிறிது சிறிதாய்
உன்னால் உணரஇயலாதபடி;
என் வலியை நீ உணராதபடி;
என் உணர்வுகளை நீ புரியாதபடி;
எனக்குள் சில வரையறைகளை
உனக்காய் விதித்துக்கொண்டு
உன்னில் இருந்து என்னை
மீட்டுக்கொள்கிறேன்
உன்னை கடந்து போக:
:இஷாரா




Comments