இருப்பு...
- Izzath Isharah

- Aug 18, 2022
- 1 min read
உன் மீது எந்த கோபமும் இல்லை
எந்த எதிர்பார்ப்பும் இல்லை
ஏதொரு ஆசையும் இல்லை
உன் அழைப்புக்காய்
காத்திருக்க தேவையில்லை
உன் நினைவுகளில் நான்
லயித்திருப்பேன் என எண்ணம்
கொள்ள வேண்டிய அவசியமில்லை
உன்னோடு பேசிக்கொண்டு இருக்க
இனி என் நேரம் ஒதுக்க தேவை
இருக்கப்போவதில்லை
உன்னை பார்க்கும் போதெல்லாம்
என் உணர்வுகள் ஊற்றெடுக்க
நான் அனுமதிக்க போவதில்லை
உன் நியாபகங்கள் என் எண்ணங்களில்
அத்துமீறி நுழைய இனிமேல்
அனுமதியில்லை
உனக்காக திறந்த என் மனச்சிறை
மீண்டும் உண்பால் உறுதியாய்
பூட்டப்பட்டே விடப்போகிறது
இருப்பு என்னும் உன்னத நிலையில்
இருந்து நீ என்னை
இல்லை என்ற விடுதலை நிலைக்குள்
நிலை நிறுத்தி விட்டாய்...
: இஸ்ஸத் இஷாரா





Comments