top of page
Search

இராச்சூளும் நினைவுகள்...

  • Writer: Izzath Isharah
    Izzath Isharah
  • Jul 26, 2022
  • 1 min read



தேங்கிப்போன சிறு நீர்க்குழமாய்

என் ஆழ் மனத்தேக்கங்களில்

கறை படிந்த ஒரு சிறு பகுதி

உன் நினைவாகிப்போனது


மூழ்கி மறைந்து போகும் சில

சில காணல் நீர்த்த்டமாய்

மாய்ந்து மடிந்து போன - என்

இராக்கல நிஜங்கள் உன்னது


ஆசயும் ஆயுதமும் ஏந்தி

என் ஆவியறுத்து போகிற - உன்

ஊடலும் கூடலும் என் நீண்ட

கனவதில் என்றோ ஓர் படிவு...


உன்னிருப்பையும் என் இறப்பயும்

இன்றே உணர்ந்து போகிறேன்

என் ஆயுள் முடிவின் சிறு பகுதியில்

சில கால வழிப்போக்கனாய் நீ


பாதி வழியில் பார்வையிழந்த

பாவியாய் நான் - என்னை

அழித்து உன்னில் நிறைத்திட

சிறு துளியென சிதைகிறேன்



: இஸ்ஸத் இஷாரா

 
 
 

Recent Posts

See All
நெருக்கம்...

நாம் என்ற நிலையில் இருந்து நான் யாரோ நீ யாரோ என்ற நிலைக்கு நகரும் மெல்ல மெல்ல முக்கியத்துவம் குறையும் பிரமிப்பு அகலும்; சுயங்கள் அழியும்;...

 
 
 

Comments


Post: Blog2 Post

©2020 by Zaara: Izzath Isharah All Rights Reserved.

bottom of page