
இதுவும் கடந்தே போகும்...!!!
- Izzath Isharah

- Sep 18, 2020
- 1 min read
சில எதிர்பார்ப்புக்கள் நிராசையாகி போவதும்
பல நாள் காத்திருப்புக்கள் அர்த்தமற்று போவதும் எனோ?
காரணங்கள் இன்றிய
பிரிவுகளும் பெறுமதியற்ற
சில புரிதல்களும் இன்னும்- என் தூக்கங்களை அழிப்பதில் ஆனந்தம் கொள்கின்றன
வார்த்தைகளின் அர்த்தங்களின் மாற்றங்கள் சில நொடிகளில் மாறிப்போவதும் அதன் வெளிப்பாடுகள் விந்தையாய் போவதும் வழமையே
சில வெறுப்புகளின் வெளிப்பாடுதான் இந்த மௌனப்பிதட்டல்கள் காரணம் ஏதுமின்றி எதுவும் நடந்துவிடப்போவதில்லை
என்றோ ஒருநாள் அந்த காரனங்கள் அறியப்படும் அன்றி இதுவும் கடந்தே போகும் அந்த காரணங்கள் உணரப்படாமலேயே....
:இஸ்ஸத் இஷாரா:






Comments