அவளும் துயரும்
- Izzath Isharah

- Oct 10, 2022
- 1 min read

அவளுக்கென்ன
படித்திருக்கிறாள்
திமிர் பிடித்தவள்
எதற்கும் துணிந்தவள்
தலைக்கணம் பிடித்தவள்
யாருக்கும் அடங்காதவள்
அவளை அவளே பார்த்துக்கொள்வாள்;
என்று ஆயிரம் ஆயிரம்
வார்தைகளை தினம் கூற யார் யாரோ
இருந்தும்; துயர் ஒன்றில்
அவளுக்கு ஆறுதல் வார்த்தை கூற
யாரும் இருந்தாரில்லை
அந்த துயரிடமே அவள்
அங்கலாய்த்துக்கொள்வாள்
உனக்காவது எனக்கும் வலிக்கும்
என்று புரிகிறதா?
என்று...
: இஸ்ஸத் இஷாரா




Comments