அவனும் அவளும் காதலும்...!
- Izzath Isharah

- Jul 9, 2020
- 1 min read
மௌனமதுவும் மந்திரமாய் போகலாம் ஊடல் கொள்ளும் வேளையில்
சிறு பார்வை கூட மௌனத்தை கலைத்து விடலாம் காதல் கொள்ளும் வேளையில்
சிறு தீண்டலும் சில்லெனத்தொட்டு விடலாம் உயிர் நாடியை
காவியம் தேடும் காதல் எல்லாம்
பார்வை ஒன்றிலே தோன்றியது தான்
பரவசப்புன்னகை வருவதெல்லாம்
தலைவனை காணும் நொடிகளில் தான்
முள்ளெனக்கண்டும் மோகம் கொள்வதெல்லாம்
அவள் மீட்டும் சிறு புன்னகையினாலேயே
சொல்லாக்காதலும் துளிர் விடும் அரும்பென
மங்கையவள் பார்வையிலே சில்லெனப்போவதெல்லாம்
அவன் கொள்ளும்
நாணத்தை ஒருகணம் ரசித்திடவே
அவள் போடும் வேஷங்களாய் போவதும்
இக்காதல் செய்யும் மாயை தானோ?
முட்டிமோதி அவிழ்த்துவிட்ட போதிலும்
அவள் நாணமாய் சிரித்திட ஒரு நொடி
அவன் படும் அவஸ்தயும் ஒரு வகை
இன்பம் தானே- அவள் சரியென்ற
ஒற்றைச்சொல்லவிழ்க்கும் வரை...
-இஸ்ஸத் இஷாரா-




Comments