அர்த்தமில்லாக்காதல்...
- Izzath Isharah

- Jun 1, 2022
- 1 min read
Updated: Jul 13, 2022

என் இரவுகள் இன்னும் கொஞ்சம்
நீண்டுதான் போய்விடாதா ? - நான்
உணர்வற்று கிடக்கும் நாழிகைகள் என்னை இன்னும் கொஞ்சம் நின்மதியாய் உறங்க விடாதா..?
உருவமற்ற என் காதலின் வலிகளுக்கும்
வரிகளற்ற என் கண்ணீரின் கவிதைகளுக்கும் - ஒரு
பொழுதேனும் அர்த்தம் கிடைத்தது விடாதா..?
நேசிப்பை நிறுத்தி விட முடிந்தால்
உன் நினைவுகளை என்னுள் அழித்து விட முடிந்தால் - உன் ஸ்பரிசத்தை சில நொடிகள் தடுத்து விட முடிந்தால்
என் இரவுகள் கண்ணீரில் கரைந்து போகாது...
முட்டி மோதி சில நினைவுகளை நிறுத்திக்கொண்டேன் காரணம்
ரணங்களின் வேதனை என் இராப்பொழுதுகளை இரக்கமே இல்லாமல் தின்று விடுகிறது...
ஒவ்வொரு விடியலிலும்
என்னை நானே எழனம் செய்து கொள்கிறேன்
அர்த்தமற்ற இந்த காதலின் வலிகள் உனக்கு தேவையா என்று...
- இஸ்ஸத் இஷாரா




Comments