விதி....!
- Izzath Isharah

- Jul 8, 2020
- 1 min read
தீராத காயங்கள் ஆயிரம் ஆயிரம்
சொல்லிதீர்த்திட ஆசையுமில்லை
அலையில்லாக்கடல் போலே
மௌனத்தின் மடியில் என் வார்த்தைகள்
தனிமையின் தாகங்களில் தோன்றிடும்
அரவணைப்புக்களின் ஆசை
தீர்ந்திடாத கதைகள் பல சொல்லும்
என் கட்டில் தலையணைகள்
வயதென்ற ஒன்று வரையறையின்றி
வளர்ந்தே போகிறது என் அனுமதியின்றி
வல்லூறுக்கண்ணில் மாட்டிய கோழிக்குஞ்சினதுதான் இந்நிலை
தேவைகள் ஏராளம் ஆசைகள் நூறாயிரம்
இருந்தும் மௌனச்சிரிப்புதான் என் விதி
சில பேரை; சில வாய்களை மூடிட
மௌனமாய் புன்னகைத்து விடுவதுதான் வழி இங்கு...!!!
:இஸ்ஸத் இஷாரா:




Comments