சாபம்..!!!
- Izzath Isharah

- Jul 26, 2020
- 1 min read
ஆயிரம் வார்த்தைகள் வர்ணித்திடா எண்ணங்களை
ஒரு துளி கண்ணீர் உணர்த்திவிடும்
என்ன இவள் ?
என்ன இவன் ?
என்ற ஏளனப்பார்வைகள் போதும் இந்த வஞ்ச உலகத்தில் நாம்
மானங்கெட்ட பிறவிகளாய் பிழைத்திட,
அந்தோ பரிதாபம் என்று மூச்சு முட்ட ஆறுதல் சொல்லி அருகிலே திரியும் உதட்டு வேர்களின் நமட்டுச்சிரிப்புகள்
ஒன்று தான் நம் சாபக்கேடு
இந்த உலகியல் போக்கின் நிதானத்தை புரிந்து கொள்ள
நம் பக்குவப்பதிவுகளும்,
அனுபவ ஞானமும் ஆழ்கடல் துளியளவுடயது என்று;
கொள்ள ஆசை வார்த்தைகளாய் காட்டிக்கொள்ளும் நசிச்சுப்பாம்புகள் இருக்கும் வரை இந்த உலகில் ஜனனம் கொள்ளும்
சிறு பூச்சிகளும் பிறக்காமலேயே இறந்துதான் போகும்..!!!
:இஸஸ்த் இஷாரா:






🖤