மீதி...
- Izzath Isharah

- Aug 16, 2022
- 1 min read
இழப்பில் எந்த வலியும்
இல்லை என உணரும் போது
இழந்தவை எல்லாம் நமக்கு
உரியவை இல்லை என்பது
தெளிவாகிறது
தேடலில் கிடைத்த பொருள்
ஒன்று வேண்டாம் என
ஒதுக்கிய போதும் நம்மில்
நிலைத்தே போய் விடும்
இறுதி வரை
எதிர்பாராமல் கிடைக்கும்
உறவுகள் எந்த அளவு சந்தோஷம்
தந்தாலும் சில காலம் தன்னில்
வேறோர் உறவை நாடி
உதறிப்போக கூடும்
ஆறுதலான அன்பும்
தெவிட்டாத காதலும்
எண்ணில்லா அக்கறையும்
சில காலம் கழிந்து
காணாமல் போகக்கூடும்
காலம் காட்டும் கோலம் எல்லாம்
அளவில்லா புன்னகையும்:
ஆழமான கண்ணீரும்;
அளவிட முடியா வலியும்;
மடிந்து போகும்
உணர்வுகளும் தான்...
: இஸ்ஸத் இஷாரா






Comments