கனவு...!!!
- Izzath Isharah

- Sep 22, 2020
- 1 min read
Updated: Jul 13, 2022
வருவதும் போவதுமாய் உன் நியாபகங்கள் என்னை ஆட்கொணரும் வேளைகளில் எல்லாம் சொல்லாமல் வாசற்படியை தாண்டுகின்றது
என் நாணங்கள்
வர்ணிக்க முடிந்திடா கனமாய் நெஞ்சோர வலிகள் கொஞ்சம் வலித்தாலும் சில இன்பமாய் மாறிப்போகிறது
கார்கால மேகமாய் கண்ணோரக்கண்ணீர் சில வேளை சில்லிடும் போதெல்லாம் உன் உதட்டோர சிரிப்புக்களில் அதுவும் காணாமலே போகிறது
முண்டியடிக்கும் அலையென உன்னை கண்டிட தவிக்கும் என் விழிகளில் சில நேர கனாக்களும் வந்தே நிறைந்து போகிறது என் கன நேர காத்திருப்புக்களில்
சில நேர அணைப்புக்களும் சில வேளை என்னை வெட்கிக்க வைக்கிறது அது தலையணையாய் போகின்ற பொழுதுகளில்
கன்னத்தில் முத்தங்களும் கற்பனையாய் இருந்திடவே
என்ன எண்ணி நாணம் கொள்கின்றேன் தருணங்கள்
பல கழிந்தும்
வார்தைகளாய் போகாதவரை இந்த காதலும் சில வேளை கனவுதானே - என்னை கொன்றுவிடவும் துணிந்திடுமோ தினமும்....
:இஸ்ஸத் இஷாரா:






Comments