top of page
Search

அவள்..!!!

  • Writer: Izzath Isharah
    Izzath Isharah
  • Jul 15, 2020
  • 1 min read

கார்மேகம் மோதியதால் கொண்ட கருங்குழலோ மங்கையவள் கூந்தலாகி அருவியென   தாண்டவம் ஆட தொடங்கியதோ தென்றல் ஒன்று தீண்டுகயில் மூன்றாம் பிறைகொண்டு பதித்துவிட்ட நுதல் அவள் கொண்டதால் என்னவோ அதை ஆட்சி செய்ய செம்பொன் பதித்த பொட்டொன்று பதிந்ததுவோ காவியப்போரென்றும் கண்டிரா வில் ரெண்டு  அவள் புருவங்கள் ஆனதோ கோதையவள் விழி மூட மட்டும் போதாது போகிறதோ கள்வனவனை கண்டிடும் தருணங்களில் மங்கையவள் பார்வை மோதி காளையர் கட்டுண்டதால் என்னவோ அவள் கருவிழியால் பார்ப்பதை குறைத்தனளோ நித்தம் சிறு விழி மோதல்கள் குறைந்தனவோ மொட்டவிழா மலதனில் நின்று தவறிய இதழ்கள் கொண்டு உருவானதோ அவள் உதடுகள் அதில் கசிந்த தேன் துளியென மென் சிரிப்பும் சிந்தியதோ மெல்லிய வளை கோடாய் வரைந்தனல் இடையொன்று  கொண்டனள் மேனியெங்கும் பரவிய நூலாடை ஒன்று ஆகிடேனோ என்றும் அவளுடனே வாழ்ந்திடேனோ.... :இஸ்ஸத் இஷாரா:



 
 
 

Recent Posts

See All
நெருக்கம்...

நாம் என்ற நிலையில் இருந்து நான் யாரோ நீ யாரோ என்ற நிலைக்கு நகரும் மெல்ல மெல்ல முக்கியத்துவம் குறையும் பிரமிப்பு அகலும்; சுயங்கள் அழியும்;...

 
 
 

1 Comment


bm.shiham
Jul 15, 2020

🖤

Like
Post: Blog2 Post

©2020 by Zaara: Izzath Isharah All Rights Reserved.

bottom of page